பிலியந்தலை, ஹெடிகம பிரதேசத்தில் கார் ஒன்றை நிறுத்தி பரிசோதனையிட்ட போது வௌிநாட்டு தயாரிப்பிலான துப்பாக்கி ஒன்றும் கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேகநபர்களிடமிருந்து 200 கிராம் வெடிபொருளும் மீட்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் மொரவக்க, பேலியகொட மற்றும் களனி பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர்கள் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளதாகவும் அப்பிரிவு மேலும் கூறியுள்ளது.
0 comments:
Post a Comment