கிரீன் கார்டுகளின் எண்ணிக்கை 57% அதிகரிக்கும்

அமெரிக்காவிற்கான புதிய விசா கொள்கையை பரிந்துரை செய்துள்ளார் அதிபர் டிரம்ப். தற்போது கிரீன் கார்டு முறை நடைமுறையில் உள்ளது.

இதனை மாற்றும் விதமாக அமெரிக்காவை கட்டமைப்போம் என்ற கொள்கையின் அடிப்படையில் புதிய விசா கொள்கையை அறிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையின் ரோஸ்கார்டனில் பேசிய அவர், 

குடும்பத்தின் அடிப்படையில் வழங்கப்படும் கிரீன் கார்டுகளைக் குறைத்து, திறன், கல்வி, ஆங்கிலத்தை துல்லியமாக பேசுதல் போன்ற இதர தகுதிகளின் அடிப்படையில் புள்ளிகள் கணக்கிட்டு குடியுரிமை வழங்க திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டார்.இது எல்லைப் பாதுகாப்பையும் உள்நாட்டு வளர்ச்சியையும் மேம்படுத்தும் என்று டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 திறன் அடிப்படையில் ஆற்றலுக்காக 12 சதவீதம் பேருக்கு தற்போது கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. புதிய பரிந்துரையின் படி திறன் அடிப்படையிலான கிரீன் கார்டுகளின் எண்ணிக்கை 57 சதவீதமாக அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment