வென்றது யுனைட்ரெட்

கிளிநொச்சி மாவட்ட துடுப்பாட்டச் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட துடுப்பாட்ட அணிகளுக்கு இடையிலான துடுப்பாட்டத் தொடரில், யுனைட்ரெட் விளையாட்டுக்கழக அணி ஓர் இலக்கினால் வெற்றி பெற்றுள்ளது.

கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் இடம் பெற்ற ஆட்டத்தில் யுனைட்ரெட் விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து உதயதாரகை விளையாட்டுக்கழக அணி மோதியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய உதயதாரகை  நிர்ணயிக்கப்பட்ட 43.5 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் சகல இலக்குகளையும் இழத்து 166 ஓட்டங்களைப் பெற்றது.

167 ஓட்டங்களைப் இலக்காகக் கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய யுனைட்ரெட் விளையாட்டுக் கழக அணி  31.4 பந்துப்பரிமாற்றங்களின் நிறைவில் 9 இலக்குகளையும் இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment