புதிய பதவியில் சமிந்த வாஸ்

தென் ஆபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம்  செய்யவுள்ள இலங்கை வளர்முக கிரிக்கெட் அணியின் பயிற்றுநர் பதவி இலங்கையின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சமிந்த வாஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

அவிஷ்க குணவர்தனவுக்கு பதிலாக சமிந்த வாஸ் புதிய பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் சபையின் ஊழல்மோசடி தடுப்புக்கான ஒழுக்கக் கோவையை அவிஷ்க குணவர்தன மீறியதாக ஐ.சி.சி. குற்றஞ்சாட்டியதை அடுத்து அவிஷ்கவை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் இடைநிறுத்தியது.

இந்த நிலையில்,  இலங்கை கிரிக்கெட் நிறைவேற்றுக் குழுவின் தீர்மானங்களில் ஒன்றுக்கு அமைய இலங்கை வளர்முக அணியின் தலைமை பயிற்றுநராக சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக  அறிவித்துள்ளது.

2013 சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் முதல் 2015வரை இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சுப் பயிற்றுநராக கடமையாற்றிய சமிந்த வாஸ், அதன் பின்னர் அயர்லாந்தின் பந்துவீச்சுப் பயிற்றுநராக செயற்பட்டார். 

2016 இல் வேகப் பந்துவீச்சு ஆலோசகராக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் நியமிக்கப்பட்டார். 2017 இல் சம்பக்க ராமநாயக்கவுக்குப் பதிலாக மீண்டும் இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சுப் பயிற்றுநராக சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டார். 


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment