கார் பந்தய வீரரான நிக்கி காலமானார்

முன்னாள் ஃபார்முலா ஒன் கார் பந்தய வீரரான நிக்கி லாடா தனது 70 ஆவது வயதில், உடல் நலக்குறைவால் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த இவர் மூன்று முறை ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

1975 ஆண்டு ஃபார்முலா ஒன் கார் பந்தையத்தில் சாம்பியன் பட்டம் வென்ற இவருக்கு 1976 ஆம் ஆண்டு விபத்தின்போது, அவருக்கு  எழும்பு முறிவு, தீக்காயம் உட்பட உடலில் பல்வேறு விதமான காயங்கள் ஏற்பட்டன.

எனினும்  1977, 1984 ஆகிய ஆண்டுகளிலும் ஃபார்முலா ஒன் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

சிறுநீரகம் மற்றும் நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்ட நிக்கி  தொற்றுநோயாலும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், இன்று காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment