பெரும் அழிவு தடுக்கப்பட்டது - பொலிஸ் உத்தியோகத்தர்

அம்பாறை சாய்ந்தமருதில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் தொடர்பில் தகவல் வழங்கிய அப்பகுதி மக்கள் தேச பக்தியுடையவர்கள், அவர்களின் உதவியால் பெரும் அழிவைத் தடுக்க முடிந்தது. 

இவ்வாறு தெரிவித்துள்ளார் பதவி உயர்வுடன் பணப் பரிசு பெறும் பொலிஸ் உத்தியோகத்தர் டபிள்யு.டி.சுமிந்த நிஹால் வீரசிங்க .

மக்களில் இருவர் என்னைச் சந்தித்து சம்பவத்தை விபரித்தனர். அதனடிப்படையில் சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்ற நான் அங்கு பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை அறிந்து உரிய அதிகாரிகளிடம் தெரியப்படுத்தினேன். அதனால் பெரும் அழிவு ஒன்று தடுக்கப்பட்டுள்ளது. என்று அவர் தெரிவித்தார்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தற்போது சார்ஜன்ட் தரத்துக்கு பதவியுயர்வு பெற்றுள்ளார். 

2009 ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி இலங்கை பொலிஸில் இணைந்து கொண்ட அவர். மொனராகலை மாவட்டத்தில் எத்திமலே கிராமத்தில் உள்ள எத்திமலே மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றுள்ளார். 

இவர் கல்முனை பிரதேச மக்களுடன் நட்புடன் பழகுகின்ற போக்குவரத்து துறை பொலிஸ் உத்தியோகத்தர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment