'முதல் குண்டுத்தாக்குதலை சஹ்ரானே மேற்கொண்டார்'

உயிர்த்த ஞாயி­றன்று இடம்­பெற்ற தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தல்­களில் அதிக வெளி­நாட்­ட­வர்­களை பலி­யெடுத்த, சங்­கிரில்லா நட்­சத்­திர ஹோட்டலில் இரு தற்­கொலைக் குண்­டுகள் வெடித்­துள்­ள­துடன் அதில் முதல் குண்டை தேசிய தெளஹீத் ஜமா அத் அமைப்பின் பயங்­க­ர­வாத குழு­வுக்கு தலைமை வகித்த மொஹம்மட் காசிம் மொஹம்மட் சஹ்ரான் அல்­லது சஹ்ரான் ஹாசிம் அல்­லது அஷ்ஷெய்க் சஹ்ரான் ஹாஷிம் என்­ப­வரே நடத்­தி­யுள்­ள­மையை சி.ஐ.டி. விசா­ர­ணை­களில் கண்­ட­றிந்­துள்­ளது.
உயிர்த்த ஞாயிறு தின­மான கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி காலை 8.54 மணிக்கு இந்த குண்டை அவர் வெடிக்கச் செய்­துள்­ள­தாக குற்றப் புல­னாய்வுப் பிரிவின் குறித்த சம்­பவம் தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் நிதிக் குற்ற விசா­ரணை பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் ஜய­சுந்­த­ரவின் கையெ­ழுத்­துடன் கோட்டை நீதிவான் ரங்க திஸா­நா­யக்­க­வுக்கு அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. இந் நிலை­யி­லேயே அன்­றைய தினம் காலை 8.55 மணிக்கு இரண்­டா­வது குண்டை மொஹம்மட் இப்­ராஹீம் இல்ஹாம் அஹமட் என்­பவர் வெடிக்கச் செய்­துள்­ள­தாக சி.ஐ.டி.யின் அவ்­வ­றிக்­கையில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.
அடை­யாளம் காணப்­பட்­டுள்ள தற்­கொலை குண்­டு­தா­ரி­க­ளான இல்ஹாம் மற்றும் சஹ்ரான் ஆகி­யோரின் தலைப் பகு­திகள் கொழும்பு சட்ட வைத்­திய அதி­காரி அலு­வ­ல­கத்தில் வைக்­கப்­பட்­டுள்ள நிலையில், அவை தொடர்பில் டி.என்.ஏ. பரி­சோ­த­னை­களை செய்ய நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது. அதன்­படி சஹ்­ரானின் தங்­கை­யான மொஹம்மட் காசிம் பாத்­திமா மத­னியா என்­பவர் தற்­போது மட்­டக்­க­ளப்பு சிறையில் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ள­துடன் அவரை கொழும்­புக்கு அழைத்து வந்து டி.என்.ஏ. கூறு­களைப் பெற்று உறுதி செய்­யவும் நீதி­மன்றம் சி.ஐ.டி.க்கு அனு­மதி வழங்­கி­யுள்­ளது.
குற்றப் புல­னாய்வுப் பிரிவின் பிர­தானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி சென­வி­ரத்­னவின் கீழ் அதன் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் ஷானி அபே­சே­க­ரவின் ஆலோ­ச­னையில் பொலிஸ் பரி­சோ­தகர் ஜய­சுந்­தர தலை­மை­யி­லான குழு­வினர் முன்­னெ­டுக்கும் விசா­ர­ணை­களில், ஷங்­ரில்லா தாக்­குதல் தொடர்பில் முழு­மை­யான தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.
கடந்த ஏபரல் 21 ஆம் திகதி ஷெங்­ரில்லா ஹோட்­டலில் முதல் குண்டு 8.54 மணிக்கு டேபிள் வன் எனும் உண­வ­கத்தில் வெடித்­துள்­ள­துடன் இரண்டாம் குண்டு அந்த உண­வகம் உள்ள மூன்றாம் மாடியின் மின் தூக்கி மற்றும் படிகள் அமைந்­துள்ள வெளி­யேறல் பிரிவில் வெடிக்க செய்­யப்­பட்­டுள்­ளது.
குண்டு வெடிப்பு இடம்­பெறும் போது குறித்த ஹோட்­டலில் 16 அறை­களில் 34 இலங்­கை­யர்­களும், 192 அறை­களில் 327 வெளி­நாட்­டவ்ர்­களும் தங்­கி­யி­ருந்­துள்­ளனர். குண்­டு­வெ­டிப்பில் 12 இலங்­கை­யர்கள், 24 வெளி­நாட்­ட­வர்கள் என 36 பேர் ஷங்­ரில்லா ஹோட்­டலில் மட்டும் பலி­யா­கி­யுள்­ளனர். இத­னை­விட 22 வெளி­நாட்­ட­வர்கள் 12 உள்­நாட்­ட­வர்கள் காய­ம­டைந்­துள்­ளனர்.
அந்த ஹோட்­டலில் இருந்த ஷிர்க் பிரகாஷ் (ஷிர்க் ப்ரகஷ்) மற்றும் ஷான் மயூர் கொவின்தி ( ஷன் மயுர் கொவின்தி) ஆகிய இந்­தி­யர்கள் காணாமல் போயுள்­ள­துடன், அந்த உண­வ­கத்தில் சேவை­யாற்­றிய ஒரு­வரும் காணாமல் போயுள்ளார்.
ஷெங்­ரில்லா ஹோட்­டலில் கடந்த ஏப்ரல் 17 ஆம் திகதி மொஹம்மட் எனும் பெயரில் முன்­னி­லை­யான ஒருவர் தனது இரு நண்­பர்­க­ளுக்கு என அறை ஒன்­றினை பதிவு செய்­துள்ளார். 393380 எனும் அடை­யாள இலக்­க­மு­டைய பதி­வி­னையே அவர் செய்­துள்ளார். அன்­றைய தினம் அவ்­வாறு அறையை பதிவு செய்­ய­வந்­தவர், உயிர்த்த ஞாயி­றன்று சினமன் கிராண்ட் ஹோட்­டலில் தற்­கொலை தாக்­கு­தலை நடாத்­திய மொஹம்மட் இப்­ராஹீம் இன்ஷாப் அஹமட் எனும் 831260645 எனும் தேசிய அடை­யாள அட்டை இலக்­கத்தை உடைய நபர் என அடை­யாளம் காணப்­பட்­டுள்ளார்.
அதன் பின்னர் ஏபரல் 20 ஆம் திகதி 862442067 எனும் அடை­யாள அட்டை இலக்­கத்தை உடைய மொஹம்மட் இப்­ரஹீம் இல்ஹாம் அஹமட் என்­ப­வரும் 873340312 எனும் அடை­யாள அட்டை இலக்­கத்தை உடைய மொஹம்மட் அசாமும் ஷங்­ரில்லா ஹோட்­ட­லுக்கு இரவு 8.00 மணி­ய­ளவில் வந்­துள்­ளனர். அவர்கள் அங்கு 616 ஆம் இலக்க அறையில் தங்­கி­யி­ருந்­துள்­ளனர்.
தற்­கொலை குண்­டு­தா­ரி­களில் இரு­வ­ராக அடை­யாளம் காணப்­பட்ட அந்த அறையில் இருந்த மொஹம்மட் இப்­ராஹீம் இல்ஹாம் அஹ­மட்டின் தந்­தை­யான மொஹம்மட் யூசுப் இப்­ராஹீம் மற்றும் அவ­ரது தாயா­ரான கதீஜா உம்மா உள்­ளிட்டோர் தற்­போது சி.ஐ.டி.யினரால் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்டு விசா­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றனர். அவர்கள் ஊடா­கவும் இல்­ஹாமின் சகோ­த­ரர்கள் ஊடா­கவும் அங்கு இரண்­டா­வது குண்டை வெடிக்கச் செய்­தவர் இல்ஹாம் என அடை­யாளம் காணப்­பட்­டுள்ளார்.
குறிப்­பாக சி.ஐ.டி. நீதி­மன்­றுக்கு கொடுத்த தக­வல்கள் பிர­காரம் குறித்த ஹோட்­டலில் 616 ஆம் இலக்க அறையில் தங்­கி­யி­ருந்­த­தாக கூறப்­படும் மொஹம்மட் அசாம் தொடர்பில் விசா­ர­ணைகள் நடாத்­தப்­பட்­டுள்­ளன. கொழும்பு 12 ஐச் சேர்ந்த மொஹம்மட் அசாமின் மனைவி ஆய்ஷா சித்­திகா மொஹம்மட் பசீர், அசாமின் பெற்­றோ­ரான சேகு மொஹம்மட் முபாரக் மற்றும் தாய் மொஹம்மட் ஹனீபா மெஹ்ருன் நிஸா ஆகி­யோரின் வாக்கு மூலங்­களின் பிர­கா­ரமும், சி.சி.ரி.வி. காணொளி பிர­கா­ரமும் கிங்ஸ்­பரி ஹோட்­டலில் தாக்­குதல் நடத்­திய தற்­கொ­லை­தாரி என்­பது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.
ஷங்­ரில்லா ஹோட்­டலில் தாக்­குதல் நடாத்­திய மற்­றைய தற்­கொலை குண்­டு­தாரி சஹ்ரான் ஹாஷிம் என சி.ஐ.டி. விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது. 862014685 எனும் அடை­யாள அட்டை இலக்­கத்தை உடைய சஹ்ரான் ஹாசிம், அஷ்ஹேய்க் சஹ்ரான் ஹாசிம் எனவும் அறி­யப்­ப­டு­வ­தாக கூறும் சி.ஐ.டி. , குரு­ணாகல் கெக்­கு­ணு­கொல்­லையைச் சேர்ந்த 955944666 எனும் அடை­யாள அட்டை இலக்­கத்தை உடைய அப்­துல்­காதர் பாத்­திமா ஹாதியா மற்றும் அவ­ரது 4 வயது மகள் பாத்­திமா ருகையா ஆகி­யோரே கடந்த 26 ஆம் திகதி சாய்ந்­த­ம­ருதில் இடம்­பெற்ற தற்­கொலை குண்­டு­வெ­டிப்பில் காய­ம­டைந்­த­வர்கள் என நீதி­மன்­றுக்கு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.
அந்த தற்­கொலை குண்­டு­வெ­டிப்பில் சஹ்­ரானின் தந்­தை­யான மொஹம்மட் காசிம், 883093984 எனும் அடை­யாள அட்­டையை உடைய சின்ன மெள­லவி என அரி­யப்­படும் மொஹம்மட் சைனி, 903432624 எனும் அடை­யாள அட்டை இலக்­கத்தை உடைய மொஹம்மட் ரில்வான் ஆகிய சஹ்­ரானின் சகோ­த­ரர்­களும் கொல்­லப்­பட்­டுள்­ள­தாக சி.ஐ.டி. கோட்டை நீதி­வா­னுக்கு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.
ஷங்­ரில்லா தாக்­கு­தலில் தற்­கொ­லை­தா­ரி­யாக சஹ்ரான் இருந்தார் என்­பதை மேலும் உறுதி செய்ய மீட்­கப்­பட்ட சஹ்­ரானின் தலைப் பகு­தியில் இருந்து பெறப்­பட்ட டி.என்.ஏ. மூலக் கூரு­க­ளுடன் அவ­ரது சகோ­த­ரி­யான மொஹம்மட் காசிம் மத­னி­யாவின் டி.என்.ஏ. கூரு­களை ஒப்­பீடு செய்ய தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.
அதன்­படி மட்­டக்­க­ளப்பு பொலி­சாரால் கைது செய்­யப்­பட்டு தற்­போது விளக்­க­ம­ரி­யலில் உள்ள அவரை இன்­றைய தினத்­துக்கும் எதிர்­வரும் 15 ஆம் திக­திக்கும் இடையில் கொழும்பு சட்ட வைத்­திய அதி­காரி அலு­வ­ல­கத்தில் முற்­ப­டுத்தி டி.என்.ஏ. சோத­னை­க­ளுக்கு ஏற்­பாடுச் செய்­யு­மாறு கோட்டை நீதிவான் ரங்க திஸா­நா­யக்க மட்­டக்­க­ளப்பு சிறைச்­சா­லைகள் அத்­தி­யட்­ச­ருக்கு உத்­த­ர­விட்­டுள்ளார்.
ஷங்­ரில்லா ஹோட்டல் சி.சி.ரி. காணொ­ளிகள் பிர­காரம் 6 ஆம் மாடியில் இருந்து வரும் குண்­டு­தா­ரிகள், மூன்றாம் மாடியில் கைலாகு கொடுத்து பிரி­வதும் அதில் ஒருவர் டேபிள் வன் உண­வ­கத்தில் உணவு எடுக்கும் பகு­தியில் குண்டை வெடிக்கச் செய்­வதும் மற்­றை­யவர் மின் தூக்கி மற்றும் படி­க­ளுக்கு அருகே வெடிக்கச் செய்­வதும் சி.சி.ரி.வி. காணொ­ளிகள் ஊடாக தெரி­வ­தாக சி.ஐ.டி. நீதி­மன்­ருக்கு கொடுத்த அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.
இத­னை­விட இந்த தற்­கொ­லை­தா­ரிகள் பயன்­ப­டுத்­தி­ய­தாக நம்­பப்­படும் 7 வாடகை வாக­னங்கள் குறித்தும் சி.ஐ.டி. விசா­ரித்து வரு­வ­தாக நீதி­மன்­றுக்கு தெரி­யப்­ப­டுத்­தப்ப்ட்­டுள்­ளது. இரு முச்­சக்­கர வண்­டிகள், 2 வெகன் ஆர் ரக மோட்டார் வாகங்கள், ஒரு ஹொண்டா வாகனம் மற்றும் இரு சுசுகி எல்டோ வாக­னங்கள் தொடர்பில் இந்த விசா­ர­ணைகள் இடம்­பெ­று­கின்­றன. இந்த வாக­னங்­களில் வெடி­பொ­ருட்கள் கொன்­டு­வ­ரப்­பட்­டதா எனவும் ஏனைய விட­யங்­களை கண்­ட­றி­யவும் அவற்றை அரச இர­சா­யன பகுப்­பாய்­வுக்கு உட்­ப­டுத்த நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.
தற்­கொலை குன்­டு­தா­ரிகள், கல்­கிசை, கொழும்பு 3, தெமட்­ட­கொடை, கொச்­சிக்­கடை, படல்­கும்­பர மற்றும் மத­கம பகு­தி­களில் 6 இர­க­சிய இல்­லங்­களை பயன்­ப­டுத்­தி­யுள்­ள­தா­கவும் அந்த வீடு­க­ளையும் இர­சா­யன பகுப்­பாய்­வுக்கு உட்­ப­டுத்தி உயி­ரியல் கூருகள் ஏதும் இருக்­கின்­ற­னவா என்­பதைக் கண்­ட­றிய நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தா­கவும் சி.ஐ.டி. மன்­றுக்கு அறி­வித்து அதற்­கான அனு­ம­தி­யையும் பெற்­றுக்­கொண்­டுள்­ளது.
தற்­கொலை குன்­டு­தாரி ஒரு­வரின் தெமட்­ட­கொடை மஹ­வில கார்ட்டுன் பகு­தியில் உள்ள வீட்­டி­லி­ருந்து மீட்­கப்­பட்ட தங்க நகைகள், மாணிக்கக் கற்­களை பெறு­மதி மதிப்­பீட்­டுக்­காக மாணிக்கக் கல் மற்று ஆப­ர­ணங்கள் அதி­கார சபைக்கு அனுப்­பவும் அனுமதி பெறப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு எதிராக பயங்கரவாத தடை சட்டத்தின் 2 ஆம் அத்தியாயத்தின் ஈ, உ, 3 ஆம் அத்தியாயம் தண்டனை சட்டக் கோவையின் 296,300,315,317,408 ஆகிய அத்தியாயங்களின் கீழும் 1996 ஆம் ஆண்டின் அபாயகரமான ஆயுதங்கள் சட்டத்தின் 2 ஆம் அத்தியாயத்தின் கீழும் குற்றம் ஒன்றை புரிந்துள்ளதாக கருதி விசாரணைகள் இடம்பெறுகின்றன.
அத்துடன் 2011 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க சட்டம் மற்றும் 2013 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க திருத்தச் சட்டம் அகையவற்றின் ஊடாக திருத்தப்பட்ட 2005 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க பயங்கர்வாதிகளுக்கு நிதி உதவி அளிப்பதை தடைசெய்யும் இணக்கப்பாட்டு சட்டத்தின் 3 ஆம் அத்தியாயத்தின் கீழும் விசாரணைகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. இது குறித்த வழக்கு இன்று மீள விசாரணைக்கு வரவுள்ளது.


Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment