மெய்க்காப்பாளரை மணம் முடித்த அரசர்

தாய்லாந்து அரசர், தனது மெய்க்காப்பாளர் பிரிவின் துணைத் தலைவரை திருமணம் செய்து கொண்டு  அவருக்கு அரசிக்குரிய தகுதியை வழங்கியுள்ளார்.

அரசராவதற்கு மணிமுடி ஏற்கும்  புனித சடங்குகள் சனிக்கிழமை நடக்கவிருப்பதற்கு  முன்பாக வியப்புக்குரிய இந்த அரச அறிக்கை வெளி வந்துள்ளது.

66 வயதாகும் அரசர் மகா வஜ்ராலங்கோர்ன் 2016 ஆம் ஆண்டு அவரது   தந்தை இறந்த பின்னர் அரசமைப்பு சட்ட முடியாட்சியின் கீழ் மன்னரானார்.

இதற்கு முன்னால் மூன்று முறை திருமணம் செய்து விவாகரத்துச் செய்துள்ள இவருக்கு ஏழு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், ஜெனரல் சுதிடா வஜ்ராலங்கோர்ன் நா அயூடியாவை அவரது அரச குடும்பத்தில் சேர்த்து சுதிடா அரசியாக மாறுவதற்கு வஜ்ராலங்கோர்ன் அரசர் முடிவு செய்துள்ளதாகவும், அரச குடும்பத்தின் பகுதியாக அரச பட்டத்தையும், தகுதியையும் அவர் கொண்டிருப்பார் என்றும் அரச அறிக்கை தெரிவிக்கிறது.

நீண்டநாள் அரசர் வஜ்ராலங்கோர்னோடு சேர்ந்து வாழ்ந்து வருகிறார் சுதிடா அரசி.  இவர்களின் உறவு முன்னதாக அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படாமல் இருந்தாலும், பல ஆண்டுகளான அவரோடு பொதுவெளியில் தோன்றியுள்ளார்.

புதன்கிழமை இரவு தாய்லாந்து தொலைக்காட்சி சேனல்களில் ஒளிப்பரப்பப்பட்ட திருமணச் சடங்கு காணொளிகள், அரசு குடும்பத்தின் பிற உறுப்பினர்கள் மற்றும் அரண்மனை ஆலோசர்கள் இதில் பங்கேற்றதை காட்டின.

சுதிடா அரசி மீது புனித நீரை அரசர் ஊற்றுவதும், இந்த தம்பதியர் திருமண பதிவேட்டில் கையெழுத்திடுவதும் ஒளிபரப்பானது.

2014 ஆம் ஆண்டு தாய்லாந்து ஏர்வேய்ஸின் முன்னாள் விமானப் பணியாளரான சுதிடா டிட்ஜேயை, தனது மெய்காப்பாளர் பிரிவின் துணைத் தலைவராக வஜ்ராலங்கோர்ன் நியமித்தார்.

70 ஆண்டுகளான தாய்லாந்தை ஆட்சி செய்த முன்னாள் அரசர் பூமிபோன் அடூன்யடேட் உலகிலேயே அதிக ஆண்டுகள் அரசராக ஆட்சி செய்த பெருமையைப் பெற்று 2016 ஆம் ஆண்டு காலமானார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment