மத ஸ்தலங்களை சோதனையிடும் போது பொலிஸ் மா அதிபரினால் விடுக்கப்பட்டுள்ள சுற்று நிருபத்துக்கு ஏற்ப செயற்படுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் பாதுகாப்புப் பிரிவினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவ்வாறு செயற்பட்டால், புரிந்துணர்வற்ற நிலைமையொன்று ஏற்படாது எனவும் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
ஜனாதிபதியுடன் கலந்துரையாடி, மத ஸ்தலங்களை சோதனையிடும் போது கைக் கொள்ள வேண்டிய முறைமைகள் அடங்கிய சுற்று நிருபமொன்று பொலிஸ் மா அதிபரினால் வெளியிடப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருபத்துக்கு ஏற்ப, சமயஸ்தலங்களை சோதனை மேற்கொள்ளுமாறு பாதுகாப்புப் பிரிவினரைக் கேட்டுக் கொள்கின்றோம்.
தற்பொழுது சமாதானத்தை நிலைநாட்டிக் கொள்வதே நாட்டில் முக்கியமான செயற்பாடாகவுள்ளது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment