பசியில் பணம் தின்ற நாய்

பசியில் பணம் முழுவது தின்று தீர்த்துள்ளது நாய் ஒன்று. இந்த அதியசய சம்பவம் இங்கிலாந்து வடக்கு வேர்ஸ் பகுதியில் நடந்துள்ளது.

லேப்ராடால் வகையின நாய் ஒன்றே 160 பவுண்டு பணத்தை மென்று தின்றுள்ளதாம். இது குறித்து ஃபாக்ஸ் நியூஸ் கொடுத்துள்ள செய்தியின்படி,

 9 வயது பையன் வளர்த்து வரும் குறித்த நாய் 160 பவுண்ட் இந்திய மதிப்பில் சுமார் ரூ. 15 ஆயிரம்  ரூபாவவை தின்று தீர்த்துள்ளது. 

இது குறித்து நாயின் உரிமையாளர் ஜூடித் ரைட்  தெரிவிக்கையில்,

 எங்களுக்கு வரவேண்டிய பணத்தைக் கவரில் போட்டு தபால் பெட்டியில் போட்டுள்ளனர். போஸ்ட் பாக்ஸில் கவரில் வைத்திருந்த பணம் முழுவதையும் பசியில் இருந்த நாய் தின்று தீர்த்துள்ளது என்றார்.

இதையறிந்த உரிமையாளர் உடனடியாக அருகில் இருந்த கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அதற்குத் தனியாக 130 பவுண்டுகள் (ரூ. 11,000) செலவழித்துள்ளார்.

இதற்கு முன்பு இப்படி பணத்தை சாப்பிட்டதில்லையென  என்று  உரிமையாளர் தெரிவித்துள்ளார். நல்வாய்ப்பாக நாயின் உயிருக்கு எந்தவொரு ஆபத்தும் இல்லாமல் மீட்டு விட்டோம் என்றும் உரிமையாளர் கூறியுள்ளார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment