குருநாகல் மாவட்டம் குளியாபிடிய மற்றும் அதனை அண்டிய புத்தளம் மாவட்டத்தை பொதுவாக வடமேல் மாகாணத்தை தழுவிய பகுதிகளில் குண்டர்கள் முஸ்லிம் இனத்தவர்களின் அவர்களுக்கு சொந்தமான மதஸ்தளங்கள், வியாபார நிலையங்கள், குடியிருப்பு வீடுகள் உட்பட பல சேதங்களை விளைவித்துள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவிக்கின்றார்கள்.
நேற்று (13) அதிகாலை குறித்த சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதாக அம் மக்கள் தெரிவிக்கின்றார்கள்.
கொட்டரமுல்ல பகுதியில் உள்ள பௌசுல் அமீர்டீன் என்பவர் குறித்த தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது. ஜனாசா வீட்டுக்கு சென்று அன்னாரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான குழுவினர் தெரிவித்தார்கள்.
இனவாத குண்டர் கூட்டத்தினால் பள்ளிவாயல்கள், அல் குர்ஆன் என்பனவும் தீக்கிரையாக்கப்பட்டதுடன் சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் பள்ளி நிருவாக சபையினர் தெரிவிக்கின்றனர்.
அச்ச சூழ் நிலையிலும் நோன்பு மாத காலத்தில் இவ்வாறான இனவாத தாக்குதல் எம்மை நோக்கி நடாத்தியமை தொடர்பில் தாங்கள் நிம்மதியற்ற வாழ்க்கையுடன் வாழ வேண்டியதாகவும் தெரிவிக்கின்றார்கள். பல கோடி ரூபா சொத்துக்களுக்கு சேதங்களை உருவாக்கி சென்றுள்ளதாகவும் தெரிவிக்கின்றார்கள்.
மெடிகே அனுகன மஸ்ஜிதுல் அப்ரார் பள்ளிவாயல், பிங்கிரிய கிண்ணியம ஜூம்ஆ பள்ளிவாயல், ஹெட்டிபொல கொட்டம்பிட்டி மஸ்ஜிதுல் ஹூதா ஜூம்ஆ பள்ளிவாயல், மஸ்ஜிதுல்
அல்அம்மர், அல் ஜமாலியா மத்ரஸா, நிக்கப் பிடிய தாருஸ்ஸலாம் ஜூம்ஆ பள்ளிவாயல் போன்ற மதஸ் தலங்களே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதுடன் அங்கிருக்கும் அல் குர்ஆன் உட்பட பல பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்டு நாசகாரமாக தீமூட்டப்பட்டுள்ளது. இது தவிர ஏனைய இடங்களிலும் பள்ளிவாயல்கள் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சம்பவ இடத்துக்கு மறு நாள் (14) மாலை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் தலைமையிலான குழுவினர் அங்கு சென்று மக்களது நிலவரங்களை கேட்டறிந்துள்ளதுடன் குறைகள் தொடர்பில் மதிப்பீடு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகளை மேற்கொள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
குறித்த விஜயத்தில் பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப்,இராஜாங்க அமைச்சர் அமீர் அலி உள்ளிட்ட ஊர் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டார்கள்.
0 comments:
Post a Comment