பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் விரைவில் வெளியிடப்படும்

2018-2019 ஆண்டு பல்கலைக்கழக கல்விக்காக மாணவர்களை உள்வாங்குவதற்கான வெட்டுப்புள்ளிகள் விரைவில் வெளியிடப்படுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இம்முறை 31 ஆயிரத்து 500 மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் இணைத்துக் கொள்ள எதிர்பார்த்திருப்பதாக ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் பி.எஸ்.எம்.குணரத்ன தெரிவித்துள்ளார். இந்த எண்ணிக்கை கடந்த வருடத்திலும் பார்க்க சுமார் 1500 பேர் வரை அதிகமானதாகும்.
அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் கற்கை நெறிகள் டிசம்பர் மாதம் ஆரம்பிக்கக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். பாதகாப்பு நிலைமைகளை கருத்திற்கொண்டு மூடப்பட்ட பல்கலைக்கழகங்கள் அடுத்த வாரத்தில் மீண்டும் ஆரம்பிக்கக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாதுகாப்புப் பிரிவு – பல்கலைக்கழகங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளது. பல்கலைக்கழகங்களை மீண்டும் ஆரம்பிக்கும் அதிகாரம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கான, பல்கலைக்ககழக உபவேந்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment