சிம்பு திருமணம் ; கண் கலங்கிய ராஜேந்தர்

சிம்புவின் திருமணம் குறித்து  கண் கலங்கிய டி.ராஜேந்தர், இறைவன் அருளால் சீக்கிரம் அவரின் திருமணம் நடைபெறும் என்றும் குறிப்பிட்டார். 

இளையமகன் குறளரசனின் திருமணம் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார் டி.ராஜேந்தர். இதன்போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

சினிமாவில் மட்டும் காதலை சேர்த்து வைப்பவன் கிடையாது. நிஜத்திலும் சேர்த்து வைப்பேன். எனக்கு எம் மதமும் சம்மதம். எல்லா பெற்றோர்களுமே அவர்களின் பிள்ளைகளின் சந்தோஷம் மற்றும் நலனுக்காக வாழ்பவர்கள். 

என் மகன் விரும்பிய பெண்ணை திருமணம் செய்ய நான் ஏன் தடையாக இருக்க வேண்டும் என்றார்.

இறுதியாக பத்திரிக்கையாளரகள் சிம்புவின் திருமணம் குறித்து கேட்டபோது சற்றே கலங்கினார். இறைவன் அருளால் சீக்கிரம் அவரின் திருமணம் நடைபெறும். 

இந்தக் கேள்வி கேட்கும்போதெல்லாம் தர்ம சங்கடமாக இருக்கிறது. எனது ஆதங்கம் எல்லாம் உங்கள் மீது இல்லை. இப்படி கேட்கும் அளவுக்கு ஆண்டவன் என்னை வைத்துவிட்டான். 

என்னுடைய வருத்தம் எல்லாம் ஆண்டவன் மீதும், விதி மீது தான். கேள்வி கேட்பது உங்களது கடமை, பதில் சொல்வதும் எனது கடமை, பதில் சொல்லாமல் போவது என்பது எனது சூழ்நிலை-என்றார்.Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment