ஒப்போ ஸ்மார்ட்போனின் விலை இவ்வளவுதான்

ஒப்போ ஸ்மார்ட்போன் நிறுவனம் தனது படைப்பான ஏ3எஸ் ஸ்மார்ட்போனின் விலையைக் குறைத்திருக்கிறது. 

ஸ்மார்ட் போன்கள் மீதான சலுகைகளும் தள்ளுபடிகளும் அதிகரித்து வரும் நிலையில், ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களும் ஸ்மார்ட்போன் மீதான விலையை வெளியான சில மாதங்கள் கழித்து குறைக்கவுள்ளதாம்.

 ஒப்போ ஏ3எஸ் ஸ்மார்ட்போனின் விலையை குறைத்திருக்கிறது. ஒப்போ ஏ3எஸ் ஸ்மார்ட்போனின் 2 ஜிபி ராம் மற்றும் 3 ஜிபி ராம் ஆகிய இரு வேரியண்ட்டிற்கும் இந்த விலைக் குறைப்புப் பொருந்தும். 

முன்னதாக ஒப்போ ஏ3எஸ் 2 ஜிபி ராம் விலை ரூ.10,990 ஆக இருந்த நிலையில், தற்போது விலை குறைப்புக்கு பின் ரூ.7,990 ஆகவும், 3 ஜிபி ராம், விலை ரூ.13,990 ஆக இருந்த நிலையில், தற்போது விலை குறைப்புக்கு பின் ரூ.9,990 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

ஒப்போ ஏ3எஸ் சிறப்பம்சங்கள்

# 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 19:9 டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர்
# 5.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் 
# 13 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 8 எம்.பி. செல்ஃபி கேமரா 
# டூயல் சிம் ஸ்லாட், 4230 எம்.ஏ.ஹெச். பேட்டரி 


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment