பொலிஸார் படுகொலை ; முன்னாள்போராளியை விடுவிக்க மைத்திரி இணக்கம்

வவுணதீவு பொலிஸார் கொலை தொடர்பில் கைதான முன்னாள் போராளியை விடுவிக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அமைச்சர் மனோ கணேசன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் மட்டக்களப்பு வவுணதீவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில்  கொல்லப்பட்ட இரு பொலிஸாரின் படுகொலைகள் தொடர்பில் கைதான முன்னாள் போராளி அஜந்தனை விடுவிக்க, ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

தற்போது கிடைக்கப்பெற்ற புதிய தகவல்களின் அடிப்படையில், பொலிஸாரை கொலை செய்தது தேசிய தெளஹீத் ஜமா அத்தின் மொஹமட் சஹ்ரான் குழுவினர் எனத் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில்  அப்பாவியான நான்கு பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளி கதிர்காமத்தம்பி ராசகுமாரன் என்ற அஜந்தனை விடுவிக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

அவரை உடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி பதில் பொலிஸ் மா அதிபருக்கும், சட்டமா அதிபருக்கும் பணிப்புரை விடுப்பதாக ஜனாதிபதி சற்று முன் உறுதியளித்துள்ளார்.

இது தொடர்பில் அஜந்தனின் மனைவியான செல்வராணி ராசகுமாரனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது  என்று அமைச்சர் பதிவிட்டுள்ளார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment