விடாலியாவை வீழ்த்தினார் செரீனா வில்லியம்ஸ்

அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் ரஷியாவைச் சேர்ந்த விடாலியாவை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டியில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் இடம்பெற்று வருகிறது. 3 முறை பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்றவரும், தரவரிசையில் 10 ஆவது இடத்தில் இருப்பவருமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) முதல் சுற்றில் ரஷியாவை சேர்ந்த விடாலியா டியாட் சென்சோவாவை எதிர்கொண்டார்.

இதில் செரீனா 2-6, 6-1, 6-0 என்ற செட் கணக்கில் வென்று 2 ஆவது சுற்றுக்கு முன்னேறினார். மற்ற ஆட்டங்களில் 4 ஆவது இடத்தில் இருப்பவரான பெர்ட்டென்ஸ் (பிரான்ஸ்) செவஸ்டோவா (லாத்வியா) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனும், 2 ஆவது நிலை வீரருமான ரபெல் நடால் (ஸ்பெயின்), முதல் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா) ஆகியோர் வெற்றி பெற்று 2 ஆவது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

4 ஆம் நிலை வீரரான டொமினிக் தியெம் (ஆஸ்திரியா) முதல் சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த டோமி பவுலை 6-4, 4-6, 7-6 (7-5), 6-2 என்ற செட் கணக்கில் கடும் போராட்டத்துக்கு பிறகு வீழ்த்தினார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment