திட்டமிட்டு காதலித்து ; தீவிரவாதி ஆக்கிய குண்டுதாரிகள்

 இலங்கையில் கடந்த மாதம் ஐ.எஸ். பயங்கரவாதிகள், தேசிய தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாதிகள் இணைந்து நடத்திய தாக்குதலில் 257 பேர் கொல்லப்பட்டனர். இலங்கையை உலுக்கிய இந்த தாக்குதலை 8 தற்கொலை படை பயங்கரவாதிகள் நடத்தியிருந்தனர். அந்த மனித வெடிகுண்டுகளின் படங்களை சமீபத்தில் இலங்கை ராணுவத்தினர் வெளியிட்டனர்.


அந்த படங்களில் புலஸ்தினி மகேந்திரன் என்ற இந்து பெண்ணின் படமும் இடம் பெற்றிருந்தது. புலஸ்தினி மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேத்தாத் தீவு என்ற பகுதியைச் சேர்ந்தவர்.

இவர் கல்லூரியில் படித்த போது முகம்மது ஹஸ்தும் என்ற முஸ்லிம் மாணவருடன் நட்பு ஏற்பட்டது. அந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

முகம்மது ஹஸ்தும் வலியுறுத்தியதால் புலஸ்தினி இந்து மதத்தை விட்டு விலகி முஸ்லிம் பெண்ணாக மாறினார். தனது பெயரை சாரா என்றும் மாற்றிக்கொண்டார்.

அவர்கள் இருவரும் இலங்கை கிழக்கு பகுதியில் ஒரு வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் தான் புலஸ்தினி மனித வெடி குண்டு பயங்கரவாதியாக மாறி நீர்க்கொழும்பு தேவாலயத்தில் தாக்குதல் நடத்தி இருப்பது தெரிய வந்தது.

அந்த தாக்குதலின்போது முகம்மது ஹஸ்துமும் மற்றொரு மனித வெடிகுண்டாக மாறி இருந்தார். முகமது- புலஸ்தினி இருவரும் மனித வெடிகுண்டுகளாக மாறி நீர்க்கொழும்பு தேவாலயத்தில் புகுந்து தங்கள் உடம்பில் கட்டி இருந்த குண்டுகளை வெடிக்க செய்திருப்பது விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டது. இதை அறிந்ததும் புலஸ்தினி தாய் கவிதா கடும் அதிர்ச்சி அடைந்தார். அவர் கூறியதாவது:-

எனது மகளை முகமது ஹஸ்தும் திட்டமிட்டு காதலித்து ஏமாற்றி கடத்தி சென்று விட்டான். அவன்தான் எனது மகளை மூளைச் சலவை செய்து மனித வெடிகுண்டு பயங்கரவாதியாக மாற்றி விட்டான்.

சமீபத்தில் கூட ஒரு தமிழ்ப்பெண், தன்னை மதம் மாற்ற முயற்சி நடப்பதாக கூறி சமூக வலைத்தளங்களில் வேண்டுகோள் விடுத்திருந்தார். “லவ் ஜிகாத்” என்ற பெயரில் இந்த கொடூரம் நடக்கிறது. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment