கொச்சிக்கடை தேவாலயத்திற்கு அருகே கண்டுபிடிக்கப்பட்ட மர்ம வாகனம்!

கிங்ஸ்பெரி ஹோட்டலில் தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டு தாரியின் வாகனமே கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அதுவே இந்த வாகனம் என குற்றப்புலனாய்வு பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்டவரின் குறித்த வாகனத்தில் தேவாலயத்திற்கு வந்துளள்ளார்.
இந்த விடயம் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாகவும் குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
கடந்த 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தங்கள் விசாரணைகள் குறித்த விபரங்களை இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.
குறிப்பிட்ட பகுதியில் கிடைக்கப்பெற்ற சி.சி.டி.வி. காட்சிகளை ஆராய்ந்தவேளை, குறித்த வாகனத்திலேயே முதல்நாள் தற்கொலை குண்டுதாரி கொச்சிக்கடையில் தேவாலயத்திற்கு வந்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்திய பயங்கரவாதியின் சகோதரர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment