நாடுமுழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கொழும்பு நகரில் பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், கொழும்பிலிருந்து வடக்கு – கிழக்கு உள்ளிட்ட மாகாணங்களுக்கான பயணிகள் போக்குவரத்துச் சேவைகள் இன்றிரவு இடைநிறுத்தப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு புறப்பட்ட பேருந்துகள் பல ஆனையிறவுடன் படையினரால் திருப்பி அனுப்பப்பட்டன.
கொழும்பு நகர், புறநகர்ப் பகுதிகளில் இராணுவத்தினர் துருப்புக்காவி கவசவாகனங்கள், இயந்திரத் துப்பாக்கிகளுடன் ரோந்துக் காவலில் ஈடுபட்டுள்ளனர்.
இராணுவத்தின் சிறப்புப் படையின் மோட்டார் சைக்கிள் படையணியும் தீவிரமான ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
வழக்கத்துக்கு மாறாக அதிகளவு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று மாலை தொடக்கம், வாகனங்கள் அனைத்தும் மறிக்கப்பட்டு சோதனையிடப்பட்டு வருகின்றன.
0 comments:
Post a Comment