மாட்ரிட் ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் ஹாலேப், பென்சிக்

ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிக்கு  சிமோனா ஹாலேப், பெலிண்டா பென்சிக் ஆகியோர் தகுதிப் பெற்றனர். உலகின் முதல்நிலை வீராங்கனை நவோமி ஒசாகா அதிர்ச்சி தோல்வி அடைந்தார். நேற்று நடைப்பெற்ற முதல் காலிறுதிப் போட்டியில்  சிமோனா ஹாலேப்(ருமேனியா)-ஆஷ்லி பார்தி(ஆஸ்திரேலியா) ஆகியோர் மோதினார். அதில் உலக தர வரிசையில் 3 இடத்தில் இருக்கும் ஹாலேப்  7-5, 7-5 என்ற நேர் செட்களில் 9வது இடத்தில் இருக்கும்  ஆஷ்லியை வீழ்த்தி அரையிறுக்கு தகுதிப்ெபற்றார். இதேபோல் 2வது காலியிறுதியில் முதல்நிலை வீராங்கனை நவோமி ஒசாகா(ஜப்பான்), 18ம் நிலை வீராங்கனை பெலிண்டா பென்சிக்(ஸ்விட்சர்லாந்து) ஆகியோர் மோதினர். முதல் செட்டை ஒசாகோ 6-3 என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றினார். தொடர்ந்து 2, 3வது செட்களை  2-6, 5-7   என்ற புள்ளி கணக்கில் பென்சிக்கிடம் இழந்த ஒசாகா அதிர்ச்சி தோல்வி அடைந்தார். ஆண்களுக்கான ஒற்றையர் போட்டியில் உலக தர வரிசையில் 11வது இடத்தில் இருக்கும் மாரின் கிளிக்(குரேஷியா),  32வது இடத்தில் இருக்கு லாஸ்லோ டீஜெரே(செர்பியா) ஆகியோர் 3வது சுற்றில் நேற்று மோதினர். சுமார் 2 மணி 9 நிமிடங்கள் நீடித்த  இந்தப் போட்டியில் மாரின் 4-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு தகுதிப் பெற்றார். அதேபோல் மற்ெறாரு 3வது சுற்றில்  உலகின் முதல் நிலை வீரர் டிஜோகோவிக்(செர்பியா), 47வது இடத்தில் இருக்கும் ஜெரேமி சார்டி(பிரான்ஸ்) ஆகியோர் மோதினர்.  இந்தப் போட்டியில் டிஜோகோவிக் 6-1, 7-6 என்ற செட்களில்  வென்றதால் காலியிறுதியில் விளையாட உளளார். மேலும் ஒரு 3வது சுறறில் உலகின் 5ம் நிலை வீரர் டொமினிக் தியம்(ஆஸ்திரியா), 10ம் நிலை வீரர் ஃபபியா ஃபோக்நினி(இத்தாலி) ஆகியோர் விளையாடினர். அதில் டொமினிக்கு 6-4,7-5 என்ற செட்களில் வெற்றிப் பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.


Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment