பல இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்கள் மன்னார் சௌத்பார் ரயில் வீதி பகுதியில் வைத்து மன்னார் குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் முன்னெடுத்தட நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்ட்டனர்.
சந்தேகநபர்களிடமிருந்து, 923 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட குறித்த இருவரும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள் பல இலட்சம் ரூபாய் பெறுமதியானவை எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment