ஒப்போவின் துணை பிராண்ட் விரைவில் வரும் !!

 ஒப்போவின் துணை பிராண்டு ரியல்மி விரைவில் புதிய ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. ரியல்மியின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ரியல்மி X சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மே 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

புதிய ரியல்மி X ஸ்மார்ட்போன்களின் அறிமுக தேதி வெய்போ தளத்தில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ரியல்மி X ஸ்மார்ட்போனுடன் சாதனத்தின் லைட் வெர்ஷன் ரியல்மி X யூத் எடிஷன் அல்லது ரியல்மி X லைட் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. 

முன்னதாக ரியல்மி X ஸ்மார்ட்போனின் விவரங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகியிருக்கின்றன. சமீபத்தில் ரியல்மி X இந்திய வெளியீட்டை உறுதிப்படுத்தும் வகையில் பி.ஐ.எஸ். சான்று பெற்றிருந்தது. இதுதவிர ஸ்மார்ட்போனிற்கான டீசரை ரியல்மி அவ்வப்போது வெளியிட்டு வந்தது. 

அதன்படி வெளியான டீசர் வீடியோ ஒன்றில் ரியல்மி X ஸ்மார்ட்போன் பாப்-அப் ரக செல்ஃபி கேமரா கொண்டிருக்கும் என தெரியவந்தது. இது ஒப்போவின் எஃப்11 ப்ரோ மாடலில் வழங்கப்பட்டிருந்ததை போன்று இயங்கும் என தெரிகிறது. இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களில் புதிய ஸ்மார்ட்போன் RMX1901 என்ற மாடல் நம்பர் கொண்டு உருவாகி வருவதும் இது கிரேடியன்ட் கலர் ஃபினிஷ் மற்றும் நீல நிறம் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment