நயன்தாராவின் இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ராஷி கண்ணா. ஜெயம் ரவியுடன் அடங்கமறு, விஷாலுடன் அயோக்யா படத்தில் நடித்துள்ளார். இளம் கதாநாயகர்கள் விரும்பும் நடிகையாக மாறி வருகிறார்.
தமிழ் தவிர தெலுங்கு திரையுலகிலும் அவரின் மார்க்கெட் நன்றாக உள்ளது. எனவே இரு மொழிகளில் தயராகும் படங்கள் அவருக்கு குவிகின்றன. இவர் தன்னுடைய முதல் காதல் பற்றி கூறியுள்ளார். ‘எனக்கு சிறு வயதில் ஏற்பட்ட முதல் கிரஷ் என்றால் அது பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தான்.
கோலிவுட்டில் எனது முதல் கிரஷ் அஜித் சார். அவரின் சிரிப்பு அசத்தலாக இருக்கும். அவரின் படம் பார்க்கும்போது அவர் எப்படா சிரிப்பார் என்று காத்திருப்பேன். அஜித் சார் நடித்த விஸ்வாசம் படம் பார்த்திருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment