புத்தகப் பைகளை சோதனையிடுவதால் நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுமா?

 மாணவர்களின் புத்தகப்பைகளை சோதனையிடுவதால் மட்டும் இலங்கையின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு விடுமா? என முன்னாள் வட. மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் கேள்வியெழுப்பியுள்ளார்.
அரசாங்கம் நாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் கோட்டை விட்டுவிட்டு, தற்சமயம் குழப்பநிலையை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
யாழில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற செய்தியார்கள் சந்திப்பில் கஜதீபன் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், “நாட்டினுடைய தலைவர்கள் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துகின்றவர்களாகவே இருக்க வேண்டும்.
இந்திய உளவுத்துறை மிகத்தெளிவாக தகவல்களை வழங்கியும் அதனை கண்டுகொள்ளாமல் அரசாங்கம் இருந்துள்ளது.
அத்துடன் காத்தான்குடியிலே, நுவரெலியாவிலே, நாட்டின் பல இடங்களிலே இவ்வாறான தாக்குதல்களுக்கு முன்னேற்பாடுகளை அல்லது ஒத்திகை பார்க்கும் நிகழ்வுகளையும் அரசாங்கம் கண்டும் காணாமலும் இருந்துள்ளதா?
நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து இந்நாட்டின் முக்கிய தலைவர்கள் பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டப்படுகின்ற நிலையில் இப்போது, இந்த விடயங்களை திசை திருப்பும் முயற்சிகளில் அரசாங்கம் இறங்கியுள்ளதா என எண்ணத் தோன்றுகிறது” என்று அவர் தெரிவித்தார்.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment