ரித்திகா வீட்டிற்குள் புகுந்த இளைஞன்

பிரபல சீரியல் நடிகை ரித்திகா வீட்டிற்குள் புகுந்த இளைஞர் ஒருவர்  ரித்திகாவைத் தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி அவரின் தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி உள்ளிட்ட பல டி.வி. தொடர்களில் நடித்து வருபவர் நடிகை ரித்திகா. இவர், சென்னை வடபழனி 100 அடி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.

வாலிபர் ஒருவர், ரித்திகா வீட்டின் காலிங் பெல்லை அடிப்பதும், கதவை தட்டுவதுமாக இருந்தார்.  வீட்டில் நடிகை ரித்திகா அப்போது இல்லை. அவருடைய தந்தை சுப்பிரமணி  கதவைத் திறந்தார்.

அப்போது  குறித்த இளைஞர், நான், கோபிசெட்டிபாளையத்தில் இருந்து வருகிறேன். உங்கள் மகள் ரித்திகாவை எனக்கு மிகவும் பிடிக்கும். டி.வி. சீரியலில் பார்த்து அவரை நான் காதலிக்கிறேன். அவரை எனக்குத் திருமணம் செய்து வையுங்கள் எனக் கேட்டுள்ளார்.

அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணி, அந்த இளைஞரை அங்கிருந்து போகும்படி கூறினார்.  அதற்கு மறுத்த அவர், சுப்பிரமணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.   

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த  பொலிஸார் குறித்த இளைஞரிடம் விசாரணைகளை முன்னெடுத்தனர்.   

அவர் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த என்ஜினீயரான பரத் (22) என்பது தெரிந்தது.  இவர் நேற்று கோவா செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தார். ஆனால் விமானத்தை தவறவிட்ட அவர், நடிகை ரித்திகாவின் முகவரியை தெரிந்துகொண்டு அவரது வீட்டுக்கு சென்று அவரை தனக்கு திருமணம் செய்துவைக்கும்படி கூறி நடிகையின் தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வடபழனி பொலிஸ் நிலையம் வந்த அவர்கள், தங்கள் மகன் அடிக்கடி மன அழுத்தத்தால் இதுபோன்ற செயல்களை செய்து வருவதாகத் தெரிவித்தனர்.

அவர் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாக பரத்தின் பெற்றோரிடம் எழுதி வாங்கிய பொலிஸார் அவரை எச்சரித்து அனுப்பினர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment