கிளிநொச்சி வீடொன்றிலிருந்து வெடிபொருட்கள், ஆயுதங்கள் மீட்பு

கிளிநொச்சி, முக்கம்பன் பிரதேசத்திலுள்ள வீடொன்றின் தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் மற்றும் பெருமளவிலான ஆயுதங்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவத்தினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைளின் போதே குறித்த வெடிபொருட்களும் ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன.
வெடிபொருள் 50 கிரேம், துப்பாக்கிப் பாகங்கள் 09, இரண்டு வாள்கள், இரும்பு குழாய் துண்டுகள், டீ-56 துப்பாக்கி ரவைகள் 15, மில்லிமீட்டர் 120 வகையான மோட்டார் குண்டின் பியூஸ் ஒன்று, ஆர்.பீ.ஜீ குண்டொன்று, மோட்டார் சைக்கிள் மற்றும் கையடக்கத்தொலைபேசியும் மீட்கப்பட்டதில் அடங்கியுள்ளது
சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment