நாட்டின் சில பகுதிகளுக்கு மழையுடனான காலநிலை தொடரும்

நாட்டின் சில பகுதிகளில் காணப்படும் மழையுடன் கூடிய காலநிலை அடுத்துவரும் நாட்களில் அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் அடுத்த சில நாட்களில் சிறிது அதிகரிப்பு ஏற்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், தென், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் குறிப்பாக பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இதேவேளை, மேல், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது. 

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment