நான்காம் கட்ட பேச்சில் பேசப்பட்ட விடயம்

ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தொடர்குண்டுத் தாக்குதல்களை அடுத்து நாட்டின் பாதுகாப்பை ஸ்திரப்படுத்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டு வருகின்ற நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சி என்ற நிலையிலிருந்து தமது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக இருதரப்புப் பேச்சுவார்த்தைகளின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுதியளித்துள்ளது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
புதிய கூட்டணியொன்றை அமைக்கும் நோக்கில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையிலான மூன்று கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில், இன்று எதிர்க்கட்சித் தலைவர் இல்லத்தில் இவ்விரு கட்சிகளுக்கும் இடையிலான நான்காவதுகட்டப்ப பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த சந்திப்பு குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
நாட்டில் தற்போது காணப்படும் அசாதாரண சூழ்நிலையிலும் எம்மிரு தரப்பிற்கும் இடையிலான பரஸ்பர நம்பிக்கையை வலுப்படுத்தும் நோக்கிலேயே இன்றைய பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தோம்.
எம்மிரு தரப்பிலும் காணப்படும் பிரச்சினைகள், குறைபாடுகள் குறித்தும் ஆராய்ந்தோம். எனினும் நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் எமது தனிப்பட்ட நலனை அடிப்படையாகக் கொண்டு செயற்படுவதற்கு நாங்கள் தயாரில்லை.
எனவே எமது பேச்சுவார்த்தையில் நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பிலேயே விசேட கவனம் செலுத்தப்பட்டது.
அதேபோன்று புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தை எவ்வாறு தோற்கடிப்பது என்பது தொடர்பிலும் கலந்துரையாடியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment