அபாயாவை கழற்றி சொப்பிங் பேக்கில் போட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்

நீர்­கொ­ழும்பு அரச வைத்­தி­ய­சா­லைக்கு சிகிச்­சைக்­காக கலர் அபாயா அணிந்து கொண்டு சென்ற பெண்­ம­ணி­யொ­ரு­வரை அபா­யாவும் முந்­தா­னையும் கழற்­றப்­பட்டு சொப்பிங் பேக்கில் போடப்­பட்டு வழங்­கப்­பட்­டுள்­ள­துடன் அதன் பின்பு சிகிச்­சைக்கு செல்­லு­மாறு வைத்­தி­ய­சாலை பெண் பாது­காப்பு ஊழி­யரால் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
இச் சம்­பவம் தொடர்­பாக நீர்­கொ­ழும்பு பெரி­ய­முல்லை ஜும்ஆ பள்­ளி­வாசல் நிர்­வாகம் கொழும்பு வடக்­குக்கு பொறுப்­பான பிரதி பொலிஸ் மா அதிபர் தேச­பந்து தென்­ன­கோ­னிடம் முறைப்­பாடு செய்­துள்­ளது.இச் சம்­பவம் பற்றி தெரி­விக்­கப்­ப­டு­வ­தா­வது, நீர்­கொ­ழும்பு வைத்­தி­ய­சா­லைக்கு கலர் அபாயா அணிந்து சிகிச்­சைக்­காகச் சென்ற முஸ்லிம் பெண்­ணிடம் அபாயா அணிந்து வரக்­கூ­டாது என்று கூறிய பெண் பாது­காப்பு உத்­தி­யோ­கத்தர் அவரை அழைத்­துச்­சென்று அபா­யா­வையும் முந்­தா­னை­யையும் கழற்றி சொப்பிங் பேக் ஒன்­றி­லிட்டு கொடுத்­துள்ளார்.
அதன் பின்பே சிகிச்­சைக்குச் செல்­லு­மாறு பணித்­துள்ளார். குறிப்­பிட்ட பெண் சிகிச்சை பெற்­றுக்­கொள்­ளாமல் வீடு திரும்பி வந்­த­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
வைத்­தி­ய­சா­லை­க­ளுக்கு ஹிஜாப் அணிந்து செல்லலாம் என சுகாதார அமைச்சு ஏற்கனவே சுற்று நிருபம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment