டாஸ் தோல்விகள் - மனம் திறக்கிறார் கோஹ்லி

தொடர் டாஸ் தோல்விகளால் பாதிக்கப்பட்டு இருக்கும் ஆர் சி பி கப்டன் கோஹ்லி அதுகுறித்து மனம் திறந்துள்ளார்.

இந்திய அணியின் கப்டன் விராட் கோஹ்லி ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியின் கப்டனாக விளையாடி வருகிறார். சர்வதேசக் கிரிக்கெட்டில் இந்தியாவை சிறப்பாக செயல்படவைத்து வரும் கோஹ்லி பெங்களூர் அணிக்கு இதுவரை சிறப்பாக எதுவும் செய்ததில்லை.

இந்த ஆண்டு விராட் கோஹ்லி தலைமையிலான அணி மிக மோசமான தோல்விகளைச் சந்தித்து வருகிறது. அதற்கு டாஸ் தோல்வியும் முக்கிய பங்கு வகித்துள்ளது. இதுவரை நடந்த 13 போட்டிகளில் 10 போட்டிகளில் டாஸ் தோற்றுள்ளார். 

இது குறித்து விராட் கோஹ்லியிடம் கேள்வி எழுப்பியபோது,

போட்டி தொடங்குவதற்கு முன்னர் டாஸ் போட்டு பிராக்டிஸ் செய்து கொண்டிருந்தேன். ஆனால் இம்முறையும் டாஸில் தோற்று விட்டேன். ஆனால் சிறப்பாக பேட் செய்தால் டாஸ் தோல்வியையும் முறியடித்து வெல்லலாம். கடைசி சில போட்டிகளை வெற்றியாக முடிக்க விரும்புகிறோம். எனத் தெரிவித்தார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment