தீப்பற்றி எரிந்த ஸ்மார்ட்போன்

சமீபத்தில் வெளியிட்ட கேலக்ஸி எஸ்10 5ஜி ஸ்மார்ட்போன் தீ பிடித்து எரிந்ததற்கு வாடிக்கையாளருக்கு இழப்பீடு தர மறுத்துள்ளது சாம்சங் நிறுவனம்.

கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனம் சமீபத்தில்தான் சாம்சங் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்தது. 
இதில் கேலக்ஸி எஸ்10 5ஜி போனும் அடக்கம். 

இதுதான் உலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் என விளம்பரம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட் போனை வாங்கி இருந்தார் லீ என்ற வாடிக்கையாளர். 

இந்த ஸ்மார்ட்போன் மேஜை மீது எந்த இடையூறும் இல்லாமல் வைக்கப்பட்டிருந்தபோது எதுவிதக் காரணமும் இல்லாமல் ஸ்மார்ட்போன் தானாவே தீ பிடித்து எரிந்தது என்று  முறைப்பாடு செய்திருக்கிறார்.  

இந்த முறைப்பாடு குறித்து  விசாரித்த சாம்சங் நிறுவனம் ஸ்மார்ட் போனில் உள்ள கோளாறால் தீ பிடிக்கவில்லை, ஸ்மார்ட் போனுக்குள் எந்த கோளாறுமில்லை வெளியிலிருந்து ஏதோ ஒரு தாக்கத்தால் தீப் பற்றியிருக்கக் கூடும் என பதில் அளித்தது. 

அதோடு இழப்பீடும் தர மறுத்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை 1,200 டாலராகும் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 83,500 ரூபாய். 



Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment