இந்த வாரத்துக்குள் அப்துர் ராஸிகை கைது செய்யுங்கள்- ஞானசார தேரர்

இந்த வாரத்துக்குள் தவ்ஹீத் அமைப்பின் அப்துல் ராஸிக்கை கைது செய்ய வேண்டும் என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
பெரிய மீனை விட்டு விட்டு சிறிய சிறிய மீன்களைப் பிடித்து விட்டு பிரச்சினைக்குத் தீர்வுகாணப் பார்க்கின்றார்கள். அப்துர் ராஸிக் இப்போது பாதுகாப்பு தொடர்பாக கருத்துத் தெரிவித்து வருகின்றார். புலனாய்வுத் துறையினரும், சி.ஐ.டி.யினரும் அவரிடம் போய் கருத்துக்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.
பெரிய திருடனிடம் போய் திருடன் யார் எனக் கேட்கும் நடவடிக்கையையே செய்து கொண்டுள்ளதாகவும் தேரர் மேலும் குறிப்பிட்டார்.
புத்தபெருமான் தொடர்பில் நச்சுக் கருத்தைப் பரப்பி பௌத்தர்களுக்கு எதிரான பிரச்சாரத்தைத் தொடக்கி வைத்தவரே இந்த அப்துர் ராஸிக்தான் எனவும் தேரர் சுட்டிக்காட்டினார்.
நேற்று ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறினார். 

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment