பேருந்து நிலையத்தில் காத்திருந்த மாணவி உட்பட இருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டனர்.
இந்தக் கொடூரச் சம்பவம் ஜப்பானில் தலைநகர் டோக்கியோவில் நடந்துள்ளது.
கவாஸகி((kawasaki)) பகுதியில், பேருந்து நிறுத்தத்தில் பள்ளிப் பேருந்துக்காக மாணவர்கள் சிலர் பெற்றோருடன் காத்திருந்தனர்.
அப்போது அங்கு வந்த 57 வயதுடைய முதியவர் ஒருவர், கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மீது கத்தியால் சரமாரியாக குத்தினார்.
இதில் 6 ஆம் வகுப்பு மாணவி மற்றும் வேறொரு மாணவரின் தந்தை உட்பட 2இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 16 பேர் படுகாயமடைந்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார், கத்தியால் குத்திய முதியவரை கைது செய்தபோதிலும், சந்தேகநபர் தன்னைத் தானே கழுத்தறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த திடீர் தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், கொலைக்கான காரணம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
0 comments:
Post a Comment