சண்டையிட விரும்பினால் ஈரான் முடிந்து விடும் - டிரம்ப்

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா, விலகுவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து  அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது.
இதையடுத்து அணு ஆயுத ஒப்பந்தத்தில் பிற நாடுகளின் ஆதரவுடன் ஈரான் தொடர்ந்து வருகிறது. இதில் விதிமுறைகளை பின்பற்ற முடியாது என்று சமீபத்தில் கூறியது. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு வளைகுடா நாடுகளுக்கு ஏவுகணை அமைப்புகளையும், போர் கப்பலையும் அமெரிக்கா அனுப்பி வைத்தது. வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவம் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சுறுத்தல் எழுந்திருப்பதால், டிரம்ப் நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாகக் கூறப்பட்டது. இதனால் இரு  நாடுகளுக்கு இடையே போர் நடைபெறுமா? என்ற அச்சம் நீடித்து வருகிறது.

இந்நிலையில், ஈரான் தாக்குதல் நடத்தினால், ஈரான் கதை  முடிந்து விடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். டிரம்ப் தனது டுவிட்டரில்,   'ஈரான் எங்களுடன் சண்டையிட விரும்பினால், ஈரான் அதோடு முடிந்து விடும். அமெரிக்காவை மீண்டும் அச்சுறுத்த முடியாது' என பதிவிட்டுள்ளார்.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment