இலங்கையர்கள் இருவரை நாடு கடத்தும் தீர்மானத்திற்கு சுவிஸ் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சுவிஸில் கடந்த 5 ஆண்டுகளாக இலங்கை தமிழ் சகோதரர்களான ஜெலக்சன் (18) மற்றும் ஜெசிபன் (17) ஆகியோர் வசித்து வருகின்றனர்.
இருவருக்கும் தற்போது அகதிகள் அந்தஸ்தை வழங்க முடியாது என சுவிஸ் இடம்பெயர்வுக்கான மாநில செயலகம் தெரிவித்துள்ளது.
சுவிஸில் பட்டப்படிப்பை முடித்த ஜெலக்சன் தற்போது பாடசாலை ஒன்றில் துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
அவரது சகோதரர் ஜெசிபன் கால்பந்தாட்டத்தில் அதிக ஈடுபாடு கொண்டுள்ளதால் கால்பந்து அணி ஒன்றில் இணைந்து செயல்பட்டு வருகிறார்.
தற்போது சகோதரர்கள் இருவரும் நாடுகடத்தப்படும் ஆபத்தில் இருப்பதால் இருவரும் மனமுடைந்து காணப்படுவதாக கூறப்படுகின்றது.
சுவிஸில் தங்களுக்கு கிடைக்கப்பெற்ற தரமான கல்வி என்பது இலங்கையில் வாய்ப்பே இல்லை என கூறும் ஜெலக்சன், இலங்கை சென்று என்ன செய்யப் போகிறோம் என்பது தொடர்பாகள குழப்பமாகவே உள்ளது என தெரிவித்துள்ளார்.
கடந்த 2014ஆம் ஆண்டு தாயாரின் கடுமையான முயற்சியால் சகோதரர்கள் இருவரும் சுவிஸிற்கு குடிபெயர்ந்ததாக கூறும் ஜெலக்சனின் உறவினர் ஷார்மி ரவி,
ஜெலக்சனின் தந்தை தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவாளர் என்பதால் இராணுவம் தொடர்ந்து அச்சுறுத்தலை அளித்து வந்ததாக கூறியுள்ளார்.
தற்போதைய சூழலில் ஜெலக்சனும் சகோதரரும் இலங்கை சென்றால், கண்டிப்பாக இராணுவத்தின் கையில் சிக்க வாய்ப்புள்ளது எனவும் ஷார்மி ரவி அச்சம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இலங்கையில் தற்போதுள்ள சூழலை குறிப்பிட்டு மீண்டும் புகலிடம் கோரி விண்ணப்பம் வழங்க சட்ட நிபுணர்கள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment