மட்டு.வில் தீவிரவாதிகளின் பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு!
மட்டக்களப்பு தாழங்குடா ஒல்லிக்குளம் முஸ்லிம் கிராமத்தில் அமைந்திருந்த தீவிரவாதிகளின் பயிற்சி முகாம் ஒன்று இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு தாழங்குடா ஒல்லிக்குளம் பகுதியில் இன்று காலை விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலில் இந்த தீவிரவாத அமைப்பினரின் பயிற்சி முகாம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
ஐ.எஸ். அமைப்பின் தற்கொலை தாரியான ரில்வானின் தலைமையில் இயங்கியதாக கூறப்படும் குறித்த பயிற்சி முகாமில் வைத்தே தீவிரவாதிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

குறித்த பயிற்சி முகாமில் இருந்து தற்கொலை தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் எஸ்லோன் குழாய் கைப்பற்றப்பட்டுள்ளது.
குழாயில் தயாரிக்கப்பட்ட வெடிபொருள் அண்மையில் கட்டுநாயக்க விமான நிலைய வீதியில் கண்டெடுக்கப்பட்டிருந்தது எனவே அந்த வெடிகுண்டு இங்கு தயாரிக்கப்பட்டதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த பயிற்சி முகாமில் இருந்த அப்துல் ரகுப் என்பவரை விசேட அதிரடிப் படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குறித்த பயிற்சி முகாமில் வைத்தே பல வெடிபொருட்கள் சோதனை செய்யப்பட்டுள்ளதுடன் இந்த பயிற்சி முகாமில் தயாரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் வெடி குண்டே கடந்த ஏப்ரல் 13 ஆம் திகதி பலமுனையில் பரீட்சித்துப் பார்க்கப் பட்டிருக்கலா என சந்தேகிக்கப்படுகிறது.
Share on Google Plus

About Editor Jeen

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment