கல்முனை போராட்டத்திற்கு ஆதரவு ; 108 தேங்காய் உடைத்து வழிபாடு

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி முன்னெடுக்கப்பட்டுவரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து  வவுனியா கந்தசாமி கோவிலில் தேங்காய் உடைத்து வழிபாடுகள் இடம்பெற்றது.

வவுனியா இந்து ஆலயங்களின் ஒன்றியமும் சமூக அமைப்புக்களும், ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த இப்போராட்டம் காலை 7.30 மணிக்கு இடம்பெற்றது.

கந்தசாமி ஆலயத்தில் இடம்பெற்ற விசேட வழிபாடுகளின் பின்னர்  ஆலய முன்றலில் 108 தேங்காய்களும் உடைக்கப்பட்டது.

இதன்போது மடுக்கந்த மூவட்டகம ஆனந்த தேரோ, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான வினோ நோகதாரலிங்கம், ராஜா குகனேஸ்வரன் உட்பட பலரும் இதில் கலந்துகொண்டனர்.

Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment