போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் கேப்டனும், தலைசிறந்த ஸ்டிரைக்கருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது பெண் தோழி மற்றும் நான்கு குழந்தைகளுடன் இந்த கோடைக்காலத்தை கிரீஸில் உள்ள கோஸ்டா நவரினோவில் நட்சத்திர ஓட்டலில் ஜாலியாக கழித்தார். அப்போது அங்குள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் குடும்பத்துடன் தங்கினார். இந்த ஓட்டலில் ஒருநாள் இரவு தங்குவதற்காக 7 ஆயிரம் பவுண்டு வாடகையாக வழங்கினார்.ஓட்டலில் தங்கியிருக்கும் செய்தியறிந்து பத்திரிகையாளர் படம் எடுப்பதற்காக மொய்த்து விடக்கூடாது. அப்படி நடந்தால் கோடைக்காலத்தை சிறப்பாக கழிக்க இயலாது என்று கருதிய ரொனால்டோ, இதற்காக ஓட்டல் ஊழியர்களின் உதவியை நாடினார். நான் இங்கு தங்கியிருக்கும் விஷயத்தை யாருக்கும் தெரிவிக்கக்கூடாது என அன்பு கட்டளையிட்டார்.
அந்த கட்டளையை ஓட்டல் ஊழியர் நிறைவேற்றினர். இதனால் விடுமுறையை முடித்துக் கொண்டு செல்லும்போது ஊழியர்களுக்கு டிப்ஸாக 18 ஆயிரம் பவுண்டு (இந்திய மதிப்பில் ரூ. 15,91,164) வழங்கினார். பின்னர் குடும்பத்துடன் ஜாலியாக விடுமுறையை கழித்தபோது எடுத்துக் கொண்ட போட்டோக்களை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். கடந்த முறையும் இதே ஓட்டலில்தான் ரொனால்டோ தங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட நேஷன்ஸ் லீக்கில் ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுக்கல் அணி சாம்பியன் பட்டம் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment