மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்து அருகாமையில் பார் வீதியில் ஹோட்டல் ஒன்றில் சூதாட்டத்தில் ஈடுபட்ட குழு ஒன்றை பொலிஸார் சுற்றிவளைத்தபோது 4 பேர் தப்பி ஓடிய நிலையில் 6 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் 7 இலட்சத்து 52 ஆயிரத்து 270 ரூபாவை மீட்கப்பட்டுள்ளதக மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையில் புலளாய்வு பிரிவு மற்றும் பொலிசார் நேற்று சனிக்கிழமை பகல் பொலிஸ் நிலையத்துக்கு அருகாமையில் பார் வீதியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு பின்பகுதில் உள்ள இடத்தில் 10 பேர் கொண்ட குழு ஒன்று சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் .
இதனையடுத்து குறித்த பதுகியை சுற்றிவளைத்த பொலிசார் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முற்பட்டபோது அவர்களில் நான்கு பேர் தப்பி ஓடிய நிலையில் 6 பேரை கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து, 7 இலட்சத்து 52 ஆயிரத்து 270 ரூபா பணம் , பாய், உட்பட தப்பி ஓடிய ஒருவரின் கையடக்க தொலைபேசி என்பவற்றை மீட்டுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்கள் வாழைச்சேனை, கல்முனை, கல்லாறு, சாய்ந்தமருது, ஆரையம்பதி, புதூர் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment