மன்னார் பேசாலை வெற்றிமாங்குடியிருப்பு பகுதியில் 'அடைக்கல அன்னை சிற்றாலயத்துக்கான அடிக்கல் நேற்று நட்டு வைக்கப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஒதுக்கிய 50 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு மற்றும் பேசாலை கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கம் , மீனவர்களின் ஒத்துழைப்புடன் சிற்றாலய கட்டுமான பணிக்கான அடிக்கல் நடப்பட்டது.
பேசாலை பங்குத்தந்தை அருட்பணி தேவராஜா கொடுத்தோர் அடிகள் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான எஸ்.பிரிமுஸ் சிறாய்வா, மன்னார் பிரதேச சபை உறுப்பினர்களான கொன்சல் குளாஸ், திருமதி கிறிஸ்டி சின்னராணி குரூஸ் உற்படப் பலர் கலந்து கொண்டு அடிக்கல் நட்டு வைத்தனர்.
குறித்த அடைக்கல அன்னை ஆலயம் மீனவர்களின் நலன் கருதி குறித்த பகுதியில் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
0 comments:
Post a Comment