சாட்சியமாக்கச் சந்தர்ப்பம் தருமாறு ஹலீம் கோரிக்கை

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மேற்­கொள்­ளப்­பட்ட தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்கள் தொடர்பில் ஆராய்­வ­தற்கு நிய­மிக்­கப்­பட்­டுள்ள பாராளுமன்ற தெரி­வுக்­கு­ழு முன்­னி­லையில் வாக்­கு­மூ­ல­ம­ளிக்க தனக்கும் சந்­தர்ப்பம் வழங்­கு­மாறு அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார முன்னாள் அமைச்­சரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.எச்.ஏ. ஹலீம் பாரா­ளு­மன்ற விஷேட தெரி­வுக்­கு­ழுவின் பிர­தித்­த­லை­வரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான கலா­நிதி ஜயம்­பதி விக்­கி­ர­ம­ரட்ண­விடம் கோரிக்கை விடுத்­துள்ளார்.
இது தொடர்பில் முன்னாள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் கருத்து தெரி­விக்­கையில்; ‘எனது பத­விக்­கா­லத்தில் நான் அநே­க­மான தௌஹீத் பள்­ளி­வா­சல்­களைப் பதிவு செய்­துள்­ள­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது. பள்­ளி­வா­சல்கள் தௌஹீத் பள்­ளி­வா­சல்கள், தப்லீக் பள்­ளி­வா­சல்கள் என வேறு­ப­டுத்தி பதிவு செய்­யப்­ப­டு­வ­தில்லை. எனது பத­விக்­கா­லத்தில் தௌஹீத் பள்­ளி­வா­சல்கள் பதிவு செய்­யப்­ப­ட­வில்லை.
பள்­ளி­வா­சல்கள் பதி­வின்­போது அதற்­கான ஆவ­ணங்­களை வக்பு சபை பரி­சீ­லனை செய்­கி­றது. உரிய ஆவ­ணங்கள் இருந்­தாலே முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் பள்­ளி­வா­சலை பதிவு செய்­கி­றது. பள்­ளி­வாசல் பதி­வு­களில் அமைச்­சரின் பங்­க­ளிப்பு இல்லை. இது தொடர்பில் தெரி­வுக்­கு­ழுவில் நான் விளக்­க­ம­ளிக்க வேண்டும். இன­வா­திகள் பள்­ளி­வாசல் பதி­வு­களை காரணம் காட்டி என் மீது குற்றம் சுமத்­து­கின்­றனர். எனது சகோ­தரர் தௌஹீத் ஜமாஅத்திற்கு உத­விகள் வழங்­கி­யுள்­ள­தாக மேல்­மா­காண முன்னாள் ஆளுநர் வாக்குமூலம் வழங்கியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுக்கு எதிராக வாக்குமூலமளிக்க எனது சகோதரருக்கும் சந்தர்ப்பம் வழங்குமாறு கோரியிருக்கிறேன்’ என அவர் மேலும் தெரிவித்தார்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment