சர்ச்சைக்குரிய வகையில் ஹிட்மேன் அவுட்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான ஆட்டம் மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 6-வது ஓவரை கேமர் ரோச் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் சிக்சரும், 4-வது பந்தில் பவுண்டரியும் விளாசினார் ஹிட்மேன். ஆனால் கடைசி பந்தை ரோச், ஆஃப் ஸ்டம்பிற்கு சற்று வெளியே குட் லெந்த் ஏரியாவில் பிட்ச் செய்தார். அதை முன்னாள் வந்து தடுத்தாட முயன்றார் ரோகித் சர்மா.
ஆனால் பந்து பேட்டிற்கும் கால் பேடுக்கும் இடையிலோடு பின்னால் சென்று விக்கெட் கீப்பர் கைக்குள் தஞ்சம் அடைந்தது. வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அப்பீல் கேட்டனர். ஆனால் மைதான நடுவர் அவுட் கொடுக்க மறுத்துவிட்டார்.இதனால் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ரிவியூ கேட்டனர்.
ரீபிளேயில் பந்து பேட்டையும், பேடையும் ஒருசேர உரசிச் சென்றது போன்று அல்ட்ரா எட்ஜ் தொழில்நுட்பத்தில் தெரிந்தது. இதுபோன்ற நேரத்தில் மைதான நடுவர் என்ன முடிவு எடுக்கிறாரோ? அதைத்தான் 3-வது நடுவர் எடுப்பார்.ஆனால் ரோகித் சர்மா விவகாரத்தில் 3-வது நடுவர் நீண்ட நேரம் அந்த காட்சியை வெவ்வேறு கோணத்தில் இருந்து ரீபிளே செய்யாமல் அவுட் கொடுத்தார். இதனால் ரோகித் சர்மா ஏமாற்றத்துடன் வெளியேறினார்.
போட்டியை பார்த்துக் கொண்டிருந்த அவரது மனைவியும் விரக்தியடைந்தார்.இதனால் கோபம் அடைந்த ரோகித் சர்மா ரசிகர்கள் டுவிட்ரில் #RohitSharma ஹேஷ்டேக் உருவாக்கி 3-வது நடுவரை வறுத்தெடுத்து வருகிறார்கள்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment