வவுனியா மடுகந்தை பகுதியில் பாரவூர்தி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் எழுவர் காயமடைந்துள்ளனர்.
வவுனியாவிலிருந்து திருகோணமலை நோக்கி எரு ஏற்றிகொண்டு பயணித்துக்கொண்டிருந்த பாரவூர்தி வேகக் கட்டுப்பாட்டையிழந்ததில் குடைசாந்து விபத்துக்குள்ளானதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த மடுகந்தை பொலிஸார் போக்குவரத்தை சீர்செய்ததுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment