ஒய்எஸ்சிஏ டிராபி ‘டை’ போட்டியில் ‘ஸ்பிக்’ வெற்றி

ஒய்எஸ்சிஏ டிராபி லீக் சுற்றில் ‘டையில் முடிந்த கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்களை வீழ்த்தியதால் ஸ்பிக் அணி வெற்றி பெற்றது. யங் ஸ்டார் கிரிக்கெட் சங்கம் நடந்தும்  50வது ஓய்எஸ்சிஏ டிராபி கிரிக்கெட் போட்டி மே 1ம் தேதி முதல் சென்னையில் நடைப்பெற்று வருகிறது. 

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கங்கள் அங்கீகரித்துள்ள கிரிக்கெட் கிளப்கள், வங்கிகள், பெரு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், எண்ணெய் நிறுவனங்கள் என நாடு முழுவதிலும் இருந்து 54 அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ளன. லீக் சுற்றின் போட்டி ஒன்றில்  ஸ்பிக் ஆர்சி  - பிரகலாத் சிசி அணிகள் மோதின.

முதலில் விளையாடிய  பிரகலாத் சிசி அணி 29.3 ஓவர்களில் எல்லா விக்கெட்களும் இழந்து 183 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக  ஏ.வெங்கடேஷ் 54 ரன்களும்,  பிரசன்னா 39 ரன்களும் எடுத்தனர்.

ஸ்பிக் ஆர்சி அணியின் உதயபிரகாஷ் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.தொடர்ந்து களமிறங்கிய ஸ்பிக் ஆர்சி அணி 30 ஓவர்களின் 6 விக்ெகட்கள் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது. அதனால் போட்டி ‘டை’யில் முடிந்தது.  
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment