மக்களாட்சி கோரிய போராட்டக்காரர்கள் மீது ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இருவர் உயிரிழந்தனர்.
சூடானில் நடந்த இக் கலவரத்தில் மேலும் பலர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
சூடானில் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஓமர் அல் பஷிர் அதிபராக பதவி வகித்த நிலையில், போராட்டக்காரர்களின் தொடர் ஆர்ப்பாட்டத்தால் கடந்த ஏப்ரல் மாதம் அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
தொடர்ந்து ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இந்த இடைக்கால ராணுவ ஆட்சி இரு ஆண்டுகள் நீடிக்கும் என்பதால், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் போராட்டக்காரர்கள் ராணுவ ஆட்சி நீங்கி மக்கள் ஆட்சிக்கு வழியிட வேண்டும் எனக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தர்ணாவில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை அங்கு வந்த ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும் கலைக்க முயன்றனர்.
இதில் ராணுவம் மற்றும் போராட்டக்காரர்களிடையே கலவரம் வெடித்ததில் இருவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
0 comments:
Post a Comment