இராணுவ பாதுகாப்புடன் வவுனியா நரசிங்கர் ஆலய உற்சவம்

வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் இன்றைய தினம்  இராணுவப் பாதுகாப்புடன் அமைதியாக இடம்பெற்றது. 

வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பக்தர்களின் தூக்கு காவடிகள், பறவை காவடிகள், பாற்செம்புகள், தீச்சட்டி, காவடிகள் போன்றன வவுனியா நகர வீதி வழியாக ஆலயத்தை வந்தடைந்து நேர்த்திகளை செலுத்தினர்.

ஆலயத்தில் அன்னதான ஏற்பாடுகள் செய்யப்பட்டதுடன், இரவு பொங்கலுக்கான மடப்பண்டமெடுக்கும் கிரியைகளும் இடம்பெற்றது.

விஷேட பூஜையுடன் சாமி உள்வீதி வலம்வந்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பறத்தில் வெளிவீதி வலம் வந்து அடியார்க்கு அருள்பாலித்து பூஜைகளும் இடம்பெற்றது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment