பனங்கூடலில் ஏற்பட்ட தீயினால் அதிகளவான பனை மரங்கள் எரிந்துள்ளதுடன் மக்கள் உபகரண பொருள்கள் சிலவும் எரிந்து சேதமடைந்துள்ளன.
இந்தச் சம்பவம் முல்லைத்தீவு செல்வபுரம் மக்கள் குடியிருப்புப் பகுதியில் நடந்துள்ளது.
இந்த தீவிபத்து தொடர்பில் அருகில் உள்ள மக்கள் பொலீசார் மற்றும் படையினருக்கு தெரியப்படுத்தியுள்ளதை தொடர்ந்து
சம்பவ இடத்திற்கு வந்த படையினர் மற்றும் பொலிஸார், கரைதுறைப்பற்று பிரதேச சபை உழியர்கள், மாவட்டச் செயலக ஊழியர்கள் ஆகியோர் இணைந்து தீயை அணைத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெப்பம் காரணமாக பனைமரக்கூடல்கள் அடிக்கடி தீப்பற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment