அரச அதிகாரிகள் அசமந்தம் ; பாதிக்கப்படும் மன்னார் மீனவர்கள்

அரச அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்மைக் கண்டுகொள்ளாததால் வாழ்வாதாரத்திற்கு கஸ்டப்படும் நாங்கள் பெண்களையும் கடல் தொழிலுக்கு அழைத்துச் செல்ல வேண்டிய துர்ப்பாக்கியநிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட அந்தோனியார் புரம் கிராம மக்கள் குறிப்பிடுகிறார்கள்.
அவர்கள் தொடர்ந்து தெரிவிக்கையில்,

தொடர்சியாக   வாழ்வாதாரத்திற்கு கஸ்டப்படுகிறோம்  எங்களிடம் உழைப்பு முயற்சி இருக்கிறது. அரச அதிகாரிகளோ நாடாளுமன்ற உறுப்பினர்களோ எவரும் எம்மைக் கண்டு கொள்வதில்லை .

கடும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட  நாம் மீள் குடியேற்றத்தின் பின்னர் சுமார் 180 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீன்பிடியை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டுள்ளோம்.

வறுமையின் காரணமாக பெண்களும் ஆபத்தான கடல் அட்டை, நண்டு இறால் போன்றவை பிடிக்கும் தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனாலும் அண்மைக் காலமாக மன்னார் மாவட்டத்தில் ஏற்படுகின்ற கடும் வெப்பம் மற்றும் வறட்சி காரணமாக கடலுக்குச் செல்லும் பிரதான படகு பாதையில் கடல் நீர் வற்றிப்போய் விடுகிறது.

இதனால் படகுகளை கடலுக்குள் இழுத்துச் செல்ல முடியாத நிலையில் நீர் இன்றி காணப்படுகின்றது. ஆகவே நாங்கள் தொடர்சியாக ஆழ் கடலுக்குச் சென்று மீன் பிடிக்க முடியாத நிலை காணப்படுகிறது.

 கடலில் பிடிக்கும் மீன்களைக் கரைக்குப் படகு மூலமாகக் கொண்டு வர முடியாமையினால் தொழிலில் கிடைக்கப்பெற்ற கடல் உணவுகளை சுமார் 3 கிலோமீற்றருக்கு மேல் தோளில் சுமந்து கரையை அடைய வேண்டிய நிலை காணப்படுகிறது.  

 பிரச்சினை தொடர்பாக பல முறை அரச அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவருக்கும் கோரிக்கை முன் வைத்தோம். இது வரை யாரும் கண்டு கொள்ளவில்லை - என்றனர்.

வெகு விரைவில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் குறித்த படகு பாதையை சீரமைத்து தருமாறும் குறித்த மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.










Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment