புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு பழைய மாணவர்கள் நிதியுதவி

புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவனுக்கு லண்டன், இலங்கை மற்றும் ஏனைய நாடுகளில் உள்ள பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் மூலமாக ஒருதொகை நிதியை வழங்கியுள்ளனர்.

வவுனியா கோவில்குளம் பகுதியைச் சேர்ந்த  தரம் 6 இல் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் இதயப் பற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில்  சிறுவனை இந்தியாவிற்கு அழைத்துச் சென்று சிகிச்சை மேற்கொள்வதற்கு மருத்துவச் செலவாக 75 இலட்சம் ரூபா தேவைப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் முன்னாள் பழைய மாணவர் சங்கச் செயலர் எஸ். சுஜனின் வேண்டுகோளுக்கு அமைய லண்டனிலுள்ள பழைய மாணவர் கா.மனோராஜின் ஊடாக லண்டனிலுள்ள பழைய மாணவர்கள்,  இந்த நிதியுதவியைச் செய்துள்ளனர்.

VTMM Global AA ஊடாகவும் இலங்கையிலுள்ள வெளிநாடுகளிலுள்ள பழைய மாணவர்களிடம் சேகரிக்கப்பட்ட 16 இலட்சத்து 9 ஆயிரத்து 728 ரூபா மாணவனின் வங்கி கணக்கில் மருத்துவ செலவிற்காக வைப்புச் செய்யப்பட்டுள்ளது.

இதுவரையில் இன்று வரையிலும் 44 இலட்சம் ரூபா வரையில் நல் உள்ளங்களின் உதவியுடன் சேகரிக்கப்பட்டு சிறுவனின் மருத்துவ செலவிற்காக வங்கிக் கணக்கில் வைப்பிடப்பட்டுள்ளது. 

தற்போது மாணவனுக்கான மருத்துவ சிகிச்சை இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் ஏனைய மிகுதி தேவைகளுக்காகவும் நன்கொடையாளர்களிடமிருந்து பண உதவி கோரப்பட்டுள்ளது.




Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment