தேவையில்லாத அழுத்தமொன்றை உருவாக்கிக் கொண்டதே தோல்விக்கு காரணம்: திமுத்

நிறைய ஓட்டமற்ற பந்துகளைக் எதிர்கொண்டு தேவையில்லாத அழுத்தமொன்றை உருவாக்கிக் கொண்டதே தென்னாபிரிக்கா அணியுடனான தோல்விக்கு காரணம் என இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் 35ஆவது போட்டியில், நேற்று (வெள்ளிக்கிழமை) இலங்கை அணியும், தென்னாபிரிக்கா அணியும் பலப்பரீட்சை நடத்தின.
செஸ்டர் லீ ஸ்ரீட்- ரிவர்சைட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், இலங்கை அணி படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்வியின் பின் கருத்து தெரிவித்த அவர்,
‘எமக்கு மத்திய வரிசையில் ஒரு நிலையான சராசரியை முன்னெடுக்க முடியாமல் போனதுதான் தோலிக்கு முக்கிய காரணம். நிறைய ஓட்டமற்ற பந்துகளைக் பெற்றுக் கொண்டோம். அவ்வாறு ஓட்டங்களைக் குவிக்காது விடத்து அடுத்துவருகின்ற வீரர்களுக்கு நிறைய அழுத்தங்களை சந்திக்க வேண்டி ஏற்படும். என்னைப் பொறுத்த வரையில் நாங்கள் தேவையில்லாத அழுத்தமொன்றை உருவாக்கிக் கொண்டோம் என நான் நினைக்கிறேன்.
உண்மையில் அவர்கள் சிறப்பாக பந்துவீசியிருந்தனர். ஹஷிம் அம்லா மற்றும் டு பிளெசிஸ் சிறந்த முறையில் துடுப்பெடுத்தடியிருந்தனர். அவர்கள் எந்தவொரு வேகமான துடுப்பாட்ட பிரயோகங்களையும் மேற்கொள்ளவில்லை. நிதானமாக துடுப்பெடுத்தாடியிருந்தனர்
ஆனாலும், நாங்களும் ஓரிரண்டு வேகமான துடுப்பாட்ட பிரயோகங்களை மேற்கொண்டு அவர்களது கவனத்தையும் திசை திருப்பி இருக்க வேண்டும், ஆனால் நாங்கள் அந்த இடத்தில் கோட்டை விட்டோம். தென்னாபிரிக்காவின் துடுப்பாட்ட வீரர்கள் விளையாடியதைப் போல துடுப்பெடுத்தாடியிருக்க வேண்டும்.
மறுபுறத்தில் அவர்கள் வேகமாக துடுப்பெடுத்தாடியிருந்தனர். இதனால் எமது களத்தடுப்பாளர்களை பின்னால் நிறுத்துவதற்கு ஏற்பட்டது. எனவே எமது வீரர்கள் மத்திய வரிசையில் அழுத்தங்களுக்கு முகங்கொடுத்து விளையாடாததால் தான் நாங்கள் தோல்வியைத் தழுவினோம்.
அதேபோன்று, எமது மத்திய வரிசையைப் பொறுத்தமட்டில் ஓட்டங்களை தொடர்ச்சியாக குவிக்காத வீரர்கள் தான் உள்ளனர். எனவே அவர்கள் ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள முயற்சி செய்து வருகின்றனர். ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் சிறந்ததொரு ஆரம்பத்தைக் கொடுத்து அதிக ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தால் ஒருவேளை மத்திய வரிசை வீரர்களுக்கு அழுத்தங்கள் இல்லாமல் ஓட்டங்களைக் குவித்திருக்க முடியும்.
எனினும், கட்டாயம் வெற்றிபெற வேண்டிய இவ்வாறான போட்டிகளில் அதுபோன்ற மனநிலையுடன் விளையாடாமல் நேர்மறையான சிந்தனையுடன் விளையாடியிருந்தால் நிச்சயம் வெற்றிபெற அதிக வாய்ப்பு இருந்திருக்கும். ஆனாலும், தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சாளர்களுக்கு ஆரம்பத்தில் இருந்து இந்த ஆடுகளம் ஒத்துழைப்பு வழங்கியிருந்தது. இதனால் எங்களுக்கு பந்துகளை எதிர்கொள்வது சற்று கடினமாக இருந்தது.
எஞ்சியுள்ள 2 போட்டிகளில் நாங்கள் கட்டாயம் வெற்றிபெற வேண்டும். இதற்கு நாங்கள் துடுப்பாட்டம், பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பு என அனைத்து துறைகளிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் நுவன் பிரதீப்புக்கு சின்னம்மை போட்டுள்ளது. அவர் குணமடைவதற்கு இன்னும் எத்தனை நாட்கள் செல்லும் என கூறமுடியாது. எனவே வைத்தியரின் அறிக்கையின்படி அவருக்கு அடுத்துவரும் போட்டிகளில் விளையாட முடியாது போனால் என்ன முடிவெடுப்போம் என்பதை தீர்மானிப்போம்’ என கூறினார்.
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில், இலங்கை அணி, எதிர்வரும் திங்கட் கிழமை மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொள்ளவுள்ளது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment